Sunday, April 28, 2024

முதுகில் டாட்டூ குத்திக் கொள்ளும் ‘லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா’ – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

Must Read

தமிழ் சினிமாவின் “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அழைக்கப்படும் நடிகை தான் நயன்தாரா. அவர் தற்போது தனது முதுகின் பின்புறத்தில் டாட்டூ குத்திக்கொள்வது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

லேடி சூப்பர்ஸ்டார்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலையாள துறையில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை நயன்தாரா. தனது முதல் சில படங்களிலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றார். அதன் பின் அவர் மீது மேல் தட்டு நடிகர்களுடன் நடிக்கும் நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது. இதனை அடுத்து சில வருடங்களில் சில இளவட்ட ஹீரோக்களுடன் நடித்து தனக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு இடத்தினை தக்க வைத்து கொண்டார்.

‘அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிங்க போல’ – வனிதாவை கலாய்த்த ரசிகர்கள்!!

அதன் பின் பல வித சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர், முதல் முறையாக நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்த, “மாயா” படத்தில் நடித்தார். தனது அபாரமான நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். “மாயா” வெளியானதும் நடிகையருக்கு முக்கியத்தும் படங்கள் அதிகமாக வெளியாகின.

இதன் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டினை உருவாக்கினார். அதற்கு அடுத்து “அறம், டோரா, இமைக்க நொடிகள்” போன்ற வெற்றி படங்களில் நடித்தார். தற்போது அவரது நடிப்பில் “நெற்றிக்கண்” திரைப்படம் வெளிவர இருக்கின்றது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் இருக்கும் நயன்தாரா அவ்வப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இப்படியாக இருக்க தற்போது தனது முதுகின் பின்புறத்தில் டாட்டூ குத்திகொள்வது போல ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

அந்த டாட்டூ டிராகன் போல உள்ளது. இது தற்காலிக டாட்டூவா அல்லது நிரந்தர டாட்டூவா என்று தெரியவில்லை. தற்போது இந்த புகைப்படம் தான் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -