Sunday, May 12, 2024

திருக்கார்த்திகை நாளில் வீட்டில் விளக்கு ஏற்றும் நேரம் & முறை – ஆன்மிக விளக்கம்!!

Must Read

இன்றைய தினம் கார்த்திகை திருநாள். இந்த தினத்தில் மஹாலட்சுமி கடாட்சம் நம் அனைவரது வீட்டிலும் வர நம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சில சாஸ்திர சம்பரதாயங்களை நாம் பின்பற்றினால் நம் வீட்டில் மஹாலட்சுமி கடாட்சம் மட்டும் அல்லாமல் நிம்மதியும் வரும்.

கார்த்திகை தீப திருநாள்:

இன்று திருவண்ணாமலையில் ஜோதியின் அம்சமான அண்ணாமலையாருக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய நாளில் நம் வீட்டில் விளக்கேற்றி தெய்வத்தினை மனம் உருகி வேண்டினால் நாம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும். அண்ணாமலையார் மற்றும் உமையாளுக்கு தீபம் ஏற்றும் நேரம் நாமும் நம் வீட்டில் விளக்கினை ஏற்ற வேண்டும். இன்றைய நாளின் சிறப்பே அது தான். வீட்டில் இன்று 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தபட்சம் 9 விளக்குகள் ஏற்ற வேண்டும். இன்று விளக்கினை ஏற்ற 5:30 மணிக்கு மேல் நல்ல நேரம் ஆரம்பிக்கிறது. அப்போது விளக்கு ஏற்றுதல் சிறப்பு.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை விளக்குகளும் புதிதாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலை படியில் வைக்கும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருந்தால் போதுமானது. வீட்டின் தலைவாசலில் 2 விளக்குகள், சமையல் அறையில் ஒரு விளக்கு, துளசி மாடம் இருந்தால் அங்கு இரு விளக்குகள், வீட்டில் மாதுளை அல்லது நெல்லிக்காய் மரம் இருந்தால் அங்கு கண்டிப்பாக விளக்கு ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற நல்எண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

‘கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி பரிவர்த்தனை வரை’ – டிச.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

தீபம் ஏற்றும் அகல் விளக்குகள் விரிசலோ அல்லது உடையாமலோ இருத்தல் நலம். இன்று வீட்டில் முடிந்த அளவு எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்றுங்கள். வீட்டில் இருளே இல்லாதபடி பார்த்து கொள்ளுங்கள். தீபங்கள் ஏற்றியவுடன், பக்தி பாடல்களை ஒலிக்க விட்டு வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். மனம் உருகி வேண்டினால், அண்ணாமலையார் அனைத்தையும் நல்குவார்!!

இனிய கார்த்திகை தீப பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -