Wednesday, May 15, 2024

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

Must Read

சென்னையில் இன்று ஆபரணத் தங்க விலை மக்கள் மனதில் நிம்மதியினை விதைப்பதை போல குறைந்துள்ளது. பண்டிகையான தீபாவளிக்கு பிறகு தங்க விலை தற்போது தான் குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

தொடர்ச்சியான உயர்வு:

இந்திய பெண்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்ய ஆசைப்படுவர். வெளிநாடுகளை பொறுத்தவரை தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே வெறும் ஒரு முதலீடு பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது. நம் நாட்டில் அது ஒரு ஆபரண மதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒருவர் மேல்வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது அவர் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் அளவினை பொறுத்து தான் முடிவு செய்யப்படுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க ஒவ்வொரு பண்டிகைக்கும் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கி மகிழ்ச்சி அடைவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உச்சத்தில் இருந்தாலும் மக்கள் நகைகளை வாங்க தவறவில்லை. இந்த தீபாவளி பண்டிகைக்கு முன் தங்க விலை அதிர்ச்சி அளிக்கும் வண்ணமாக உயர்ந்து வந்தது.

இன்றைய விலை நிலவரம்:

ஆனால், அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் தங்க விலை அதிரடியாக சரிந்து வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து கொரோனா நோய் பரவலையும் மீறி கடைகளுக்கு சென்று நகை வாங்கினர். ஆனால், நேற்று தங்க விலை எப்போதும் போல் அதிரடியாக உயர்ந்தது. ஆனால், இன்று சற்று நிம்மதி அடையும் வகையில் சற்று குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ரூ.38,40க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,801 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கமும் (24 கேரட்) ஒரு பவுன் 160 ரூபாய் குறைந்து ரூ. 41,488 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ.68.10 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100 என்று விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -