Monday, May 13, 2024

பெட்ரோல், டீசல் விலை குறைவு – மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

Must Read

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல், டீசல்

மக்களின் தினசரி தேவையாக மாறியது பெட்ரோல் மற்றும் டீசல். வாகனம் இல்லாத வீடே இல்லை ஆகையால் பெட்ரோல், டீசல் முக்கியமாக தேவைப்படுகிறது. சில ஆண்டுகளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதத்தின் இரண்டு முறை நிர்ணயிக்கும் முறையை அமல்படுத்தினர். இந்த முறை 15 ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த நிலையில் பின்பு தினசரி விலை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

petrol and disel
petrol and disel

சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய்க்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில காலங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் தங்கம் விலை போல் உயர்ந்து கொண்டே வந்தது. கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை பரவலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்பு ஜூன் மற்றும் ஜூலையில் இதன் விலை அதிரடியாக உயர்ந்தது.

இன்றைய விலை

அதிரடியாக உயர்ந்த நிலையில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றில் இருந்து சரிய தொடங்கி உள்ளது. சென்னையில் இன்றைய விலை நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.14 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.95 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

petrol bumb
petrol bumb

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று காலை 6 மணியளவில் அமலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒன்றரை மாதமாக எந்தவித மாற்றமின்றி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RR 2024: படுத்தே விட்டானய்யா.. ட்ரெண்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -