டேஸ்டியான “காடை பெப்பர் மசாலா” ரெசிபி – வாங்க சமைக்கலாம்!!

0

அசைவ பிரியர்களுக்கு ஒரு சூப்பரான காடை ரெசிபி. எப்பவுமே மீன், மட்டன், சிக்கன் ஒரே மாதிரி சாப்பிடாம கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணி பாருங்க. காடை நம் உடலுக்கு மிகவும் நல்லது. காடை ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். வாங்க ‘காடை பெப்பர் மசாலா’ எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

காடை – 4

தயிர் – அரை கப்

பெரிய வெங்காயம் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

கரம்மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்

மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

காடையை சுத்தமாக கழுவிட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து ஊறவைக்க வேண்டும். ஒரு மணிநேரம் கழித்து ஊறவைத்த காடையை எடுத்து லேசாக கழுவ வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை தோலுரித்து அரைத்து வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதங்கியவுடன் கறிவேப்பிலை, கரம் மசாலா சேர்க்க வேண்டும். பிறகு காடையை சேர்த்து லேசாக கிளற வேண்டும். 3 நிமிடம் கழித்து இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காடையில் நன்றாக மசாலா சேர்ந்தவுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு வேகவைக்க வேண்டும். தண்ணீர் வற்றி காடை வெந்தவுடன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். காரம் அதிகமாக தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மேலே தூவி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here