Saturday, May 11, 2024

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

Must Read

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வழக்கு திரும்ப பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நோட்டீஸ்:

சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சொத்து நிலுவையாக உள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உரிமையாளரான ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ragavendra marriage hall
ragavendra marriage hall

அந்த மனுவில் கூறப்பட்டதாவது “மத்திய மற்றும் மாநில அரசு விதித்த பொது முடக்க உத்தரவு காரணமாக மண்டபம் வாடகைக்கு விடப்படாமல் இருந்தது. அதனால், மாநகராட்சி விதித்திருந்த சொத்துக்கான வரியினை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” இவ்வாறாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.

நீதிபதி எச்சரிக்கை:

அவர் கூறியதாவது “நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கினை தொடர்ந்து எதற்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதே போல் இப்படி செய்தால் வழக்கினை அதிக அபாரத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் எச்சரித்தார்.

உ.பி.,யில் மேலும் ஒரு கொடூர சம்பவம் – 4 வயது பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம்!!

இதனால் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வழக்கினை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் வழக்கினை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: CSK மீண்டும் தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 59 வது லீக் போட்டியில் சென்னை அணி,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -