EMI தொகைக்கு ‘வட்டிக்கு வட்டி இல்லை’ அறிவிப்பு – உடனடியாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

0
supreme court
supreme court

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கின. இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வேலை இழந்ததால், தனி நபர் வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொகைகளுக்கும் தவணைத்தொகை (EMI) செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

emi

இதன் காரணமாக பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், வங்கிகள் சார்பில் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது ஒத்திவைக்கப்பட்ட EMI தொகையை திரும்ப செலுத்தும் போது, அதற்கு வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சகம், ரூ.2 கோடி வரையிலான கடன் தொகைக்கு EMI வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உத்தரவாதம் அளித்து பிராமணப் பத்திரம் தாக்கல் செய்தது. அந்த தொகையை மத்திய அரசே வங்கிகளுக்கு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!!

மேலும் இன்னும் சில மாதங்கள் EMI தொகையை ஒத்திவைக்க சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் 6 மாத கால EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி இல்லை என்கிற நடைமுறையை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோரப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதிகள், உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதற்கிடையில் வட்டிக்கு வட்டி இல்லை என்கிற நடைமுறையை வங்கிகள் ஏற்கனவே அமல்படுத்த தொடங்கி உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here