Thursday, April 18, 2024

அரசுத்துறை அலுவலகங்கள் பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் சேவைகளை பயன்படுத்த வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!!

Must Read

இனி அரசுத்துறை அலுவலகங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய தொலைத்தொடர்பு சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சகங்களுக்கும் இது தொடர்பாக உத்தரவு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

புதிய தொலைத்தொடர்பு இணைப்பு:

இந்தியாவில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு சேவை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டதாவது, “இனி அனைத்து அமைச்சகங்கள், துறை அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் சுயாட்சி அமைப்புகள் என்று அனைத்தும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு சேவையினை தான் பயன்படுத்த வேண்டும்”

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

“தொலைத்தொடர்பு வசதிகளான இணைய வசதி, தொலைத்தொடர்பு இணைப்புகள், இன்டர்நெட் சேவைகள் மற்றும் லேண்ட்லைன் சேவைகள் என்று அனைத்தும் இனி இந்த இரு நிறுவனங்களிடம் இருந்து தான் பெற வேண்டும்.”

சுற்றிக்கை:

“அரசுத்துறை மேலதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அனைத்து நிர்வாக அமைப்பு அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும்” இவ்வாறாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு நடத்திய ஆலோசனைக்கு பிறகு மத்திய அரசு அமைச்சகங்கள், செயலாளர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சுற்றரிக்கையும் அனுப்பியுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையேற்று நடத்திய ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் நஷ்ட பாதையில் சென்ற பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு ஆறுதல் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 34 வது லீக் போட்டியில்  சென்னை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -