Monday, April 29, 2024

முடி உதிர்தலை தடுக்கும் “ஆவாரம் பூ” – இயற்கை வைத்திய முறை!!

Must Read

முடி உதிர்தல் என்பது அனைவர்க்கும் தீராத கவலையாக இருக்கும். பல விதமான கண்டிஷனர், ஷாம்பு பயன்படுத்துவதால் இது போன்று நிகழ்வது தற்போது இயல்பாகி விட்டது. இதற்கு எளிமையான இயற்கை மருத்துவ தீர்வு ஒன்று உள்ளது.

ஆவாரம் பூ:

இயற்கையாக கிடைக்கும் அனைத்து பொருட்களும் அபூர்வமானவை. அதில் அளப்பரிய பயன்கள் உள்ளன. தற்போது உள்ள அவசர உலகில் நாம் அதனை உணர்வதில்லை. பழங்கால தமிழர்கள் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து தங்களை செம்மைப்படுத்தி கொண்டனர். நாமும் அதனை பயன்படுத்தினால் பக்க விளைவுகள் அற்ற பயன்களை பெறலாம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

அப்படி முடி உதிர்தல் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உள்ளது. பக்க விளைவுகள் இல்லாத எளிமையான வழி ஆவாரம் பூவினை பயன்படுத்துவது தான். பளீரென மஞ்சள் வண்ணத்தில் இருப்பது தான் ஆவாரம் பூ. இது பல இடங்களில் வளரும். கீரை மற்றும் காய்கறிகள் விற்கும் இடங்களில் கூட இந்த பூ கட்டாக கிடைக்கும். அதனை பயன்படுத்தி முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம். இந்த பூக்கள் குறித்து பழங்கால பாடல்கள் கூட உள்ளன.

தேவையான பொருட்கள்:

முடி உதிர்தலை தடுக்க ஆவாரம் பூவுடன் சில பொருட்களை கலந்து ஷாம்பு போல் தயாரிக்க வேண்டும். அதற்கு தேவையான பொருட்கள்,

  • ஆவாரம் பூ – 1 கட்டு
  • செம்பருத்தி இலை அல்லது பூ – கொஞ்சமாக
  • தேங்காய் பால் – அரை கப்

செய்யும் முறை:

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்றாக மை போல அரைத்து கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது??

இந்த கலவையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்த வேண்டும். இந்த கலவையை நன்றாக முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கூந்தல் செழுமையாக வளரும். முடி உதிர்தலும் நின்று விடும். இயற்கை வைத்தியம் என்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 3  நாட்கள் டாஸ்மாக் Close.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -