Saturday, May 18, 2024

முடி உதிர்தலை முற்றிலுமாக நிறுத்த வேண்டுமா?? இது மட்டும் போதும்!!

Must Read

இன்று இருக்கும் அவசரமான உலகில் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்னை, முடி உதிர்தல். இது பலரை மனஉளைச்சலுக்கு கூட உட்படுத்திவிடும். இப்படி முடி உதிர்தலுக்கு பல காரணங்கள் உள்ளன. அதனை தவிர்த்து நமது பாரம்பரிய முறைகளை பயன்படுத்தினால், எளிதாக இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரலாம்.

முடி உதிர்தலுக்கான காரணங்கள்:

முடி உதிர்வது என்பது அனைவருக்கும் இயல்பாக நடைபெறும் அழகு பிரச்சனைகளில் ஒன்று. இதனை யாராலும் தவிர்க்க முடியாது. ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் முடி உதிர்ந்தால் அதனை நாம் சாதாரணமானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூந்தல் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ரசாயனங்கள் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவது, உடல் உஷ்ணமாவது, எண்ணெய் தேய்க்காமல் இருப்பது, வாரத்தில் அனைத்து நாட்களும் முடியினை பின்னாமல் இருப்பது போன்ற காரணங்களால் தான் முடி அதிகமாக உதிர்கிறது. இதனை, தவிர்க்க சில வழிமுறைகளை பயன்படுத்தினாலே போதும்.

டிப்ஸ் இதோ:

எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்:

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் மற்றும் ஆலிவ் ஆயில் 1 ஸ்பூன் இதனை கலந்து கொண்டு வாரத்திற்கு ஒரு முறை முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து விட்டு 40 நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு அலசவும். இதனால் முடி உதிர்தல் கட்டுப்படும்.

எலுமிச்சை மற்றும் கத்தாழை ஜெல்:

எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், வீட்டில் வளரும் கத்தாழை ஜெல் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து கொண்டு அதனை வேர்க்கால்களில் படும்படி தேய்க்கவேண்டும். இதனை வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது மட்டுப்படும். உடலும் குளிர்ச்சி அடையும்.

ஆவாரம் பூ:

ஆவாரம் பூ கொஞ்சம், செம்பருத்தி இதழ்கள் 4 முதல் 5, தேங்காய் பால் அரை கப் இவை அனைத்தையும் நன்றாக மை போல அரைத்து வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் சுத்தமாக நின்றுவிடும்.

avaram flower
avaram flower

தவிர்க்க வேண்டியது:

முடி உதிர்தலை பாரம்பரிய முறையில் தவிர்க்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். நமது கூந்தலின் நலனுக்காக அனைத்து நாட்களிலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது தலையினை துப்பட்டாவால் மூடிக்கொள்ளலாம்.

உடல் உஷ்ணத்தால் தான் அதிகமாக முடி உதிரும், அதனால் குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்ளுதல் அவசியம். எலுமிச்சை பல வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் வாரத்தில் ஒரு நாள் தாராளமாக பயன்படுத்தலாம். அனைத்து விதமான உடல் வாகுகளுக்கும் பொருந்தும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -