சானிடைசர் பயன்படுத்துவது நோய் எதிர்ப்பு திறனை பாதிக்கும் – எய்ம்ஸ் மருத்துவர் அதிர்ச்சி தகவல்!!

0

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று பிற நாடுகளுக்கு தீவிரமாக பரவியது. இதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ள நிலையில் தடுப்பு மருந்து ஆராய்ச்சி கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. கொரோனா தொற்று நமக்கு சுகாதாரத்தின் அவசியத்தை புரிய வைத்துள்ளது. இதனால் வெளியில் செல்லும் போது முகக்கவசம், கையுறை அணிவது மற்றும் வீட்டிற்கு வந்த உடன் சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கழுவிய பின்னர் பிற பணிகளை செய்வது என பொதுமக்கள் சுகாதாரமாக வாழத் தொடங்கி உள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனால் நோய்த்தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்றாலும், அதிகப்படியாக பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பாக எய்ம்ஸ் நுண்ணுயிர் துறை தலைவர் ராம்சவுத்திரி அவர்கள் கூறுகையில், நமது உடலில் சுற்றுச்சூழல் மாற்றத்தால் ஏற்படும் நோய்களை நுண்ணுயிரிகள் நோய் எதிர்ப்பு மூலம் தடுப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் அதிகப்படியாக சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்துவது, அந்த நுண்ணுயிரிகளையும் முழுவதுமாக அழித்து விடும் என எச்சரித்தார்.

நீட் தேர்வு முடிவுகள் 2020 – இன்று வெளியாக வாய்ப்பு, எப்படி தெரிந்து கொள்வது??

இதனால் கால்நடைகள், சுற்றுச்சூழல் மண்டலம் என வெளிப்பகுதிகளில் இருந்து நமது உடலை தாக்கும் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு நுண்ணுயிர் மண்டலங்கள் தடுக்கிறது. இவை சானிடைசர்களால் அழிந்து விட்டால் நமது நோய் எதிர்ப்பு திறனும் பாதிக்கப்படும். எனவே பொதுமக்கள் தேவையான நேரங்களில் மட்டும் சோப்பு, சானிடைசர்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here