நீட் தேர்வு முடிவுகள் 2020 – இன்று வெளியாக வாய்ப்பு, எப்படி தெரிந்து கொள்வது??

0
NEET EXAM
NEET EXAM

நாடு முழுவதும் நடத்தப்பட்ட மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் ntaneet.ac.in அல்லது mcc.nic.in ஆகிய வலைதளங்களில் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகள்:

அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் (இன்று) நீட் 2020 முடிவு அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், நீட் UG முடிவுகளின் வெளியீட்டு தேதி குறித்து என்.டி.ஏ இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. 85 சதவீத மருத்துவ மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல், கட்-ஆப் விபரம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Exams
Exams

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நீட் தேர்வுகள் 2020 செப்டம்பர் 13ம் தேதி பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, அதிகபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. இதற்காக சுமார் 15.97 லட்சம் தேர்வர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்கள் தெரிவித்துள்ளார்.

100 ரூபாய் நாணயம் – பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்!!

சில நாட்களுக்கு முன்னர் நீட் இளநிலை தேர்விற்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை சரிபார்த்து ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவிக்குமாறு தேசிய தேர்வு முகமை தேர்வர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தேர்வர்கள் முடிவுகள் வெளியான பின் ntaneet.nic.in, mcc.nic.in ஆகிய வலைதளங்களில் தங்களது பதிவெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here