Sunday, May 5, 2024

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் கைது – போலீசார் அதிரடி!!

Must Read

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சரியாக விளையாடாததால் அவரது 5 வயது மகளுக்கு சமூகவலைதளம் வாயிலாக பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது பள்ளி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசமான ஆட்டம்:

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் துபாயில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் எந்த வீரர்களும் சரியாக விளையாடவில்லை.

தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிக்கும் பொதுமக்கள்!!

தற்போது உள்ள நிலவரப்படி, சென்னை அணி நடந்து முடிந்த 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டும் வெற்றி அடைந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அணியின் தோல்விக்கு காரணம் வீரர்கள் சரியாக விளையாடாதது தான் என்று கூறப்பட்டது. குறிப்பாக, சென்னை அணியின் கேப்டன் தோனி சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

வாலிபர் கைது:

சிலர், தங்களது கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தோனியின் அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தில் சிலர் எல்லை மீறி பேசியுள்ளனர். குறிப்பாக இருவர், யாரும் எதிர்பார்க்காத கருத்துக்களை தெரிவித்தனர். தோனியின் 5 வயது மகளான ஜிவாவிற்கு பாலியல் மிரட்டல் விடுத்தனர். தோனி சரியாக அணியில் விளையாடவில்லை என்ற காரணத்திற்காக இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

bad comments against ziva
bad comments against ziva

இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் அந்த கருத்துக்களை பதிவேற்றவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து கருத்தினை பதிவிட்டவரை போலீசார் கண்டுபிடித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். குஜராத் மாநிலம் குச் பகுதியில் உள்ள நாம்னா கபாயா கிராமத்தைச்சேர்ந்த 16 வயது பிளஸ் 2 பள்ளி மாணவர் தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தற்போது ராஞ்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -