தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிக்கும் பொதுமக்கள்!!

0
Gold
Gold

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வர்த்தகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் முடங்கி, உற்பத்தி சரிந்ததால் விலைவாசி அதிகரித்தது. மேலும் இறக்குமதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் வலுவிழந்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபி.,யும் வரலாறு காணாத அளவு சரிந்தது. இதன் விளைவுகள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் துறைகள் கீழே செல்ல, தங்கத்தின் மதிப்பு மட்டும் மேலே சென்று கொண்டிருந்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஊரடங்கின் போது நகை வியாபாரம் தடை பட்டாலும், அதன் விலை மட்டும் உயர்ந்து கொண்டே சென்றது. இதற்கு காரணம் அதன் மீதான அதிகப்படியான முதலீடுகள் தான். இதனால் கொரோனாவை பார்த்து அஞ்சுவதை விட, தங்க நகை விலை உயர்வை பார்த்து மக்கள் அச்சப்பட தொடங்கினர். ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரம் ரூபாயை கடந்தது பேரதிர்ச்சியாக இருந்தது. இம்மாத தொடக்கத்தில் சற்று குறைந்த விலை, கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளது.

வெண்பாவை திருமணம் செய்யப் போகும் பாரதி?? அதிரடி திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 39 ஆயிரம் ரூபாயை தாண்டி உள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6 அதிகரித்து ரூ.4,887 ஆகவும், ஒரு சவரன் ரூ. 48 உயர்ந்து ரூ. 39,096 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மறுபுறம் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.66.80 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here