Monday, April 29, 2024

திருப்பூர் அரசு மருத்துவமனையில் அலட்சியம்?? ஆக்சிஜன் கிடைக்காமல் 3 கொரோனா நோயாளிகள் பலி!!

Must Read

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறி மரணம் அடைந்துள்ளனர். மருத்துவமையின் அலட்சியத்தால் தான் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வார்டு:

திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர்த்து உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் என்று பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் கட்டப்பணிகளும் நடைபெற்று வருகின்றது. இன்று காலை சுமார் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இதனால், கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கவுரவன் (60), யசோதா (60) இன்னும் ஒருவர் மின்சாரம் இல்லாததால் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடன் கேட்ட போது அவர் மரணம் அடைந்தவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்டதால் இறந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

மின்சார கம்பிகள் துண்டிப்பு:

அதே போல் இன்னும் சிலர் கட்டட பணி நடக்கும் இடத்தில் வேலை பார்ப்பவர் ஒருவர் தான் மின்சார கம்பிகளை துண்டித்துள்ளார் என்று கூறியதை அடுத்து கட்டட பணி ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மத்திய போலீஸ் பிரிவில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் – உள்துறை அமைச்சகம் தகவல்!!

ஆனால், மரணமடைந்தவர்களின் உறவினர்களோ மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் மூவரும் பலியாகியுள்ளனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -