மத்திய போலீஸ் பிரிவில் 1 லட்சம் காலிப்பணியிடங்கள் – உள்துறை அமைச்சகம் தகவல்!!

0

மத்திய ஆயுத போலீஸ் படைகளின் பல்வேறு பிரிவுகளில் (CAPF) 1,00,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக மாநிலங்களவை கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலியிடங்களில் பெரும்பாலானவை கான்ஸ்டபிள் தரத்தில் உள்ளன என்று உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் தனது எழுத்துப்பூர்வ பதிலில் விளக்கம் அளித்துள்ளார்.

1 லட்சம் காலிப்பணியிடங்கள்:

மத்திய போலீஸ் பிரிவில் உள்ள காலியிடங்களில் எல்லை பாதுகாப்பு படையில் (PSF) அதிகபட்சமாக 28,926 இடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 26,506 காலியிடங்களும் உள்ளது. மேலும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) 23,906 காலியிடங்களை கொண்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

எஸ்.எஸ்.பி மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (IDPP) பிரிவுகளில் முறையே 18,643 மற்றும் 5,784 காலியிடங்கள் உள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப்படும் அசாம் ரைபிள்ஸ் 7,328 காலியிடங்களைக் கொண்டுள்ளது.

assam rifles
assam rifles

நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

இந்த படைகளுக்கு ஆட்சேர்ப்பு என்பது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC), பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) அல்லது அந்தந்த பிரிவுகளின் தலைமையகம் ஆகியவற்றால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது. இவற்றில், மிகவும் பிரபலமான தேர்வு யுபிஎஸ்சி நடத்தும் உதவி கமாண்டண்டுகள் (CAPF) தேர்வாகும். இது வருடத்திற்கு ஒரு முறைதான் நடக்கிறது. தற்போது, ​​60,210 கான்ஸ்டபிள்கள், 2,534 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 330 உதவி கமாண்டண்டுகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் ராய் மாநிலங்களவையில் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here