நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் – மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு!!

0
college students
college students

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் முதலாமாண்டில் சேரும் இளநிலை மற்றும் முதுநிலை கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கல்லூரி வகுப்புகள்:

கொரோனா பரவல் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் தேர்வு, வகுப்புகள் என மாணவர்களை டெக்னாலஜி பக்கம் இழுத்து வந்துள்ளது. இதிலும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் வரும் காலங்களில் ஆன்லைன் கல்வியை ஊக்குவித்து மாணவர்களை பழக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக முதலாமாண்டில் சேரும் மாணவர்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அனைத்து கல்லூரிகளும் அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முதலாமாண்டில் சேரும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும், 2021ம் ஆண்டு மார்ச் 8 முதல் 26ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

இரண்டாவது செமஸ்டர் வகுப்புகள் ஏப்ரல் 5 முதல் தொடங்கும் எனவும், ஆகஸ்ட் 9 முதல் 21ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கால் பல நாட்கள் வீணானதால் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் எடுக்கப்பட உள்ளதாகவும், கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகள் இருக்காது எனவும் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here