Monday, May 6, 2024

கபசுர குடிநீர் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது – ஆய்வில் தகவல்!!

Must Read

கபசுர நீர் மூலமாக கொரோனா பரவலுக்கான எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாகவும், கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சித்தமருத்துவமுறை காரணமாக கொரோனா நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்ற தகவலை மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பதில்:

கடந்த சில நாட்களாக மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் நாட்டில் நடக்கும் பல விதமான பிரச்சனைகள் விவாதிக்கப்படுகின்றன. அதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி ஒன்றினை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், “தமிழகத்தில் சித்தமருத்துவத்தை அடிப்படையாக கொண்டு தான் கொரோனாவிற்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.”

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

“இதனை மத்திய அரசு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் நன்கு அறியும். இதனை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய சித்த மருத்துவ கவுன்சிலின் சித்த மருத்துவமனைகளும், தேசிய சித்த மருத்துவ நிறுவனமும் தமிழக அரசுடன் இணைந்து இப்பணியில் முழு வீச்சில் இயங்கி வருகின்றன. இதன் மூலமாக மக்கள் பயன்பெறுவர் என்று நம்பப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் எதிர்ப்பு ஆய்வு:

மேலும் கபசுர நீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் இவற்றை முறையாக உட்கொண்டவர்களிடம் சோதனை ஆய்வுகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கொடுக்கப்பட்டு ஒன்பது விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

தேமல் பிரச்சனையை அடியோடு விரட்ட அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

நான்கு கட்டமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயம் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் மக்களுக்கு கிடைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்கும் ஆற்றலும் இந்த கபசுர நீர் மற்றும் நிலவேம்பு கஷாயத்திற்கு உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -