தேமல் பிரச்சனையை அடியோடு விரட்ட அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
allergy
allergy

பல பேருக்கு முகப்பரு பிரச்சனைகள் இருக்காது. ஆனால் தேமல் பிரச்சனை இருக்கும். சருமத்தில் வியர்வை தங்குவதால் இந்த தேமல் பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக விடுபட சில வழிமுறைகள் உள்ளன – வாங்க பார்க்கலாம்.

தேமலை போக்க??

தேமல் பயப்படும் அளவிற்கு பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் அதனை ஆரம்பத்தில் அசால்ட்டாக விட்டு விட்டால் உடல் முழுவதும் வேகமாக பரவி விடும். இந்த தேமலை தடுக்க எளிய வைத்திய முறைகள் உள்ளன.

radish
radish
  • முள்ளங்கியை தோலுரித்து சிறிதாக நறுக்கி மோரில் 1 மணி நேரம் ஊறவைத்து அதன்பின் அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவவும். முள்ளங்கி குளிர்ச்சி மிகுந்த பொருள். எனவே இது சருமத்திற்கும் குளிர்ச்சியை தரும். சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.
aada thodai
aada thodai
  • அடுத்து புடலங்காயை இரண்டாக நறுக்கி(மேல் இருந்து கீழாக நறுக்க வேண்டும்) அதனுள் இருக்கும் விதையை நீக்கி விடவும். கற்றாழை ஜெல்லை அதனுள் வைத்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு காலையில் அதனை எடுத்து தேமல் இருக்கும் பகுதியில் தடவ வேண்டும்.
  • ஆடா தொடை மூலிகை மருத்துவ குணம் நிறைந்தது. அந்த இலையை தேங்காய் எண்ணையில் போட்டு வெயிலில் வைத்து ஊறவைக்க வேண்டும். அந்த எண்ணெயை தேமல் இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 தடவை தடவ வேண்டும்.
  • உடல் முழுவதும் அதிகப்படியான தேமல் இருந்தால் துளசியையும், சுக்கையும் அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தடவவும். இதனால் கிருமிகள் மறையும்.
skin allergy remedies
skin allergy remedies
  • மேலும் ஆரஞ்சு பழ தோலை வெயிலில் காயவைத்து அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து தேமல் இருக்கும் இடத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்க செல்ல வேண்டும். இதில் ஏதேனும் ஒரு வழிமுறையை 6 மாதங்கள் பின்பற்றி வந்தால் தேமல் இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here