Friday, May 17, 2024

நாட்டு மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி உறுதி!!

Must Read

இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. அதில் நாட்டில் நிலவும் அனைத்து விதமான பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம்;

இன்று முதல் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விடுமுறை இன்றி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் நாட்டில் நிலவும் கொரோனா பரவல், மக்கள் மத்தியில் கொரோனா நோய் குறித்த பயம், பொருளாதார வீழ்ச்சி, எல்லை பதற்றம், இவை அனைத்தும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் மீண்டும் தொடக்கம்- Dinamani

இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ மற்றும் கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மோடி உரை:

இந்த கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது “இந்த கூட்டத்தொடரில் பங்குபெறும் அனைவரும் கூட்டம் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.”

‘இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பா’!! – ரம்யா பாண்டியனை விளாசிய நெட்டிசன்கள்!!

“அதே போல் மக்கள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலகில் எங்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும். அது வரை மக்கள் தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -