Saturday, May 18, 2024

101 ராணுவ ஆயுதங்களை இறக்குமதி செய்ய தடை – பாதுகாப்பு துறை அதிரடி!!

Must Read

இந்தியாவில் பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு தடை விதிக்கிறது, இது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக அமையும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பொருட்கள் இறக்குமதி:

நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இனி இந்தியாவில் 101 பாதுகாப்பு பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடை விதிப்பிற்காக ‘ஆத்மனிர்பர் பாரத் அபியான்’ (சுய நம்பக இந்தியா இயக்கம்) மூலமாக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலில் 101 பாதுகாப்பு பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தனது ட்விட்டரில் தன்னம்பிக்கையை நோக்கி இது ஒரு படியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

பட்டியலில் என்ன என்ன?

இந்த பட்டியலில், அடிப்படை பயிற்சி விமானம், பல பீப்பாய் ராக்கெட் ஏவுகணைகள், பலவிதமான ரேடார்கள், தாக்குதல் துப்பாக்கிகள், துப்பாக்கி சுடும் துப்பாக்கிகள், பீரங்கிகள், பல வகையான வெடிமருந்துகள் இலகு போக்குவரத்து விமானம், நீண்ட தூர நில தாக்குதல் கப்பல் ஏவுகணைகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் மினி யுஏவி போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் மகிழ்ச்சி!!

இந்த பட்டியலில் சக்கர கவச சண்டை வாகனங்களும் (AFVs) சேர்க்கப்பட்டுள்ளன. அவை கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா அரசால் 5,000 கோடிக்கு வாங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியதாவது:

இது குறித்து ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது ” இறக்குமதி மீதான இந்த தடை உத்தரவு 2020 முதல் 2024 வரை செயல் படுத்தபடும். ஆயுத படைகளுக்கு என்ன என்ன தேவைகள் இருக்கிறது என்பதை பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு தெரிவிப்பதே எங்கள் நோக்கம். இதன் மூலமாக உள்நாட்டுமயமாக்கலின் இலக்கை சிறந்த முறையில் அடைய தயாராக உள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

defence minister rajnath singh
defence minister rajnath singh

2015 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2020 ஆகஸ்ட் மாதம் வரை ஏறக்குறைய 260 திட்டங்கள் முத்தரப்பு சேவைகளால் ரூ .3.5 லட்சம் கோடி செலவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது அடுத்த 6 முதல் 7 ஆண்டுகள் வரை” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம், நடந்த ஆய்வு ஒன்றில் ராணுவ பொருட்களுக்காக இறக்குமதியில், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -