பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் – யுஜிசி திட்டவட்டம்!!

0
supreme court
supreme court

கொரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்த கட்டாயப்படுத்தும் யுஜிசி உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் எனவும், தேர்வெழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது எனவும் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கல்லூரிகள் ஆன்லைன் வழியாக தேர்வுகளை நடத்துமாறு யுஜிசி பரிந்துரைகளை வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. அதனை எதிர்த்து நாட்டின் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த பொழுது, செப்டம்பர் 30 க்குள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயமாக நடத்தி முடிக்குமாறு யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களையும் வலியுறுத்தி உள்ளது. இந்த தேர்வுகள் ஆஃப்லைன், ஆன்லைனில் அல்லது இரண்டும் கலந்து கூட நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்து உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்!!

முந்தைய விசாரணையில், உச்சநீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கவில்லை, ஆனால் மாணவர்கள் தொடர்ந்து தயார் செய்ய வேண்டும் என்றும், தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்று நினைக்க இயலாது என தெரிவித்தது. இந்த மனுவில் கர்நாடகா, அசாம், உத்தரபிரதேசம், பீகார், மேகாலயா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கையெழுத்திட்டனர். தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகளை நடத்துவதால், இறுதி ஆண்டு மாணவர்களின் முடிவுகளை உள் மதிப்பீடு அல்லது முன்பு நடந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மாணவர் கோரினர்.

UGC
UGC

யு.ஜி.சி, அனைத்து பல்கலைக்கழகங்களையும் செப்டம்பர் மாதத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வலியுறுத்தியது. அது நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டது என்று நியாயப்படுத்தியது. ஆன்லைனில் தேர்வுகள் எழுதுவதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசாங்கங்கள் மாநில பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தன. ஆனால் மாநிலங்கள் அத்தகைய முடிவை எடுக்க முடியாது என்று யுஜிசி கூறியது. அதே நேரத்தில், கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு யுஜிசி மற்ற அனைத்து இடைநிலை செமஸ்டர் தேர்வுகளையும் (இறுதியாண்டு தவிர) ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here