செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்!!

0

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் செப்டம்பரில் பள்ளிகளை மீண்டும் திறப்பது ஒரு சமூக, பொருளாதார மற்றும் தார்மீக கட்டாயமாகும் என்றும், கொரோனா தொற்று நோயால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்த போதிலும் பள்ளிகள் பாதுகாப்பாக செயல்பட முடியும் என்றும் வலியுறுத்தினார்.

பள்ளிகள் திறப்பு:

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாவது அலையை எட்டியுள்ளது. இதனால் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பல மாதங்களாக பூட்டப்பட்டு உள்ள பள்ளிகளை மீண்டும் திறப்பது தேசிய முன்னுரிமை என்று பிரதமர் ஜான்சன் வலியுறுத்தி உள்ளார். தேசிய ஊரடங்கின் போது இங்கிலாந்தில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன, மேலும் ஜூன் மாதத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கிலாந்தில் வரும் செப்டம்பர் தொடக்கத்தில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார். “எங்கள் பள்ளிகளை மூடி வைத்திருப்பது சமூக சகிப்புத்தன்மையற்றது, பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதது மற்றும் தார்மீக ரீதியாக விவரிக்க முடியாதது” என்று ஜான்சன் கூறி உள்ளார்.

Boris Johnson
Boris Johnson

விஜயவாடாவில் தீ விபத்து – கொரோனா நோயாளிகள் 10 பேர் மரணம்!!

பள்ளிகள் மூடப்பட்டால் வேலை செய்ய முடியாத பெற்றோர்களுக்கான பொருளாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன, மேலும் குழந்தைகள் கல்வியைத் தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று பிரதமர் எச்சரித்தார். “இந்த தொற்றுநோய் முடிந்துவிடவில்லை. ஆனால் இப்போது அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கு வந்தால் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்று செயல்பட முடியும்” என அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here