ஐபிஎல் 2020 ஸ்பான்சர்சிப் ஏலம் – பந்தயத்தில் குதித்த பதஞ்சலி பாபா ராம்தேவ்!!

0
baba raamdev
baba raamdev

சீன நிறுவனமான விவோவின் ஐபிஎல் ஸ்பான்சர்சிப்பை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட பிசிசிஐ இந்த சீசனுக்கு இந்திய நிறுவனத்தை ஸ்பான்சர் ஆக கொண்டுவர ஏலம் விடும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அதில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது.

ஐபிஎல் 2020:

ஐ.பி.எல் 13வது சீசன் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் இந்தியாவுக்கு வெளியே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும். செப்டம்பர் 19 ஆம் தேதி போட்டிகள் தொடங்கினாலும், பிசிசிஐ இன்னும் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களைக் பெறவில்லை. சில நாட்களுக்கு முன்பு, பி.சி.சி.ஐ தனது ஸ்பான்சர்ஷிப்பை விவோவிடம் இருந்து திரும்பப் பெற்றதாக அறிவித்தது.

vivo ipl
vivo ipl

தற்போது வெளியான தகவல்கள் படி, பாபா ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஐபிஎல் முக்கிய ஸ்பான்சர்ஷிப் ஆக உருவாக ஏலம் எடுக்கக்கூடும். பதஞ்சலியின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.திஜர்வாலா, “பதஞ்சலியை உலகளாவிய பிராண்டாக மாற்ற விரும்புகிறோம், அதனால்தான் ஐபிஎல் ஸ்பான்சர் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம்” என்று கூறினார்.

பதஞ்சலி ஸ்பான்சர்:

பதஞ்சலி உலகளாவிய பிராண்ட் அல்ல என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அவர்கள் ஐ.பி.எல் இன் முக்கிய ஸ்பான்சர்ஷிப்பைப் பெற்றால், அவர்கள் நிச்சயமாக பயனடைவார்கள். விவோவுக்குப் பிறகு, ஜியோ, அமேசான், டாடா குரூப், ட்ரீம் 11 மற்றும் பைஜு ஆகியவையும் ஐபிஎல் முக்கிய ஸ்பான்சர்ஷிப்பிற்கான போட்டியில் உள்ளன. ஐபிஎல் சீசன் 13 இன் புதிய ஸ்பான்சர்களுக்கான ஏலம் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் புதிய நடைமுறைகளை பிசிசிஐ பின்பற்றும். எனவே, ஸ்பான்சர்களைத் தேர்ந்தெடுக்க டெண்டர் செயல்முறை பின்பற்றப்படும்.

விவோ ஸ்பான்சர்:

விவோவுடனான ஒப்பந்தத்தை கடந்த வாரம் நிறுத்த பிசிசிஐ முடிவு செய்தது. 2017 ஆம் ஆண்டில் விவோ இந்தியா ஐபிஎல் முக்கிய ஸ்பான்சர்ஷிப் உரிமையை ரூ .2199 கோடிக்கு வாங்கியது. ஒப்பந்தத்தின் படி, நிறுவனம் ஒவ்வொரு சீசனிலும் சுமார் 440 கோடி ரூபாய் பிசிசிஐக்கு செலுத்த வேண்டியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here