Monday, April 29, 2024

சமையல் செய்ற அப்போ இதல்லாம் பிரச்சனையா? – அப்ப இத மிஸ் பண்ணாம படிங்க!!

Must Read

சமையல் என்பது ஒரு கலை. அதனை விரும்பி செய்தால் தான் சாப்பிடுபவர்கள் திருப்தி அடைவார்கள், ஆனால், சிறு சிறு தவறுகள் அப்போ அப்போ நடக்கத்தான் செய்யும், அப்படி நடந்து விட்டால் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது சமைப்பவருக்கு தெரியவேண்டும். அதற்கு சில சின்ன சின்ன டிப்ஸ் அதுவும் லிட்டில் பிரின்சஸ்க்கு ஸ்பெஷல் ஆக இதோ..

எப்படி தவறுகளை சரி செய்யலாம்:

உப்பு பிரச்சனையா?

சமையல் செய்யும் போது சில நேரங்களில் உப்பு கூடி விடும் இதனை தவிர்க்கவே முடியாது, உப்பு மட்டும் தான் ஒரு உணவின் ருசியினை அதிகரிகாவுக்கும் செய்யும், அப்படியே குறைக்கவும் செய்யும். சரி.. இப்படி நடந்து விட்டால் என்ன செய்வது என்பது தானே அடுத்து, ஒரு உருளைக்கிழங்கை எடுக்கொள்ளுங்கள், அதில் பத்தியை மட்டும் நறுக்கி உப்பு கூடிய பதார்தத்தில் சேர்த்துக்கோங்க.. அவ்ளோ தான். சாப்பாடு ருசியோ ருசி

வெங்காய டிப்ஸ்

அடுத்து வெங்காயம், அதனை நினைத்தாலே சில பெண்களுக்கு கண்ணீர் வந்துவிடும். இந்த வெங்காயம் வெட்ட பலருக்கும் பிடிக்காது ஏனென்றால், வெட்டும்போது கண் எரிச்சலை ஏற்படுத்துவதால், அதற்கு கொஞ்ச நேரம், வெங்காயத்தை தோல் உரித்து விட்டு தண்ணீர் இல் போட்டு விடுங்கள்..அவ்ளோதான்

புசு புசு பூரி

அடுத்து, பூரி வீட்டில் அனைவரும் கேட்பது நல்ல புசு புசு னு பூரி செஞ்சு கொண்டுவா என்பது தான். ஆனால், நாம் அவர்களுக்கு கொடுப்பதோ சப்பிப்போன பூரியை தான். அதற்கு என்ன செய்யலாம் ஒன்னும் இல்லை, கொஞ்சம் சோயாமாவு கலந்து மாவு பிசைந்தால், பூரி புசு புசு னு வந்துரும்.

வாடை போக

அடுத்து, அசைவம், சிலருக்கு மீன் ஆனால் பிடிக்காது, அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அதில இருந்து கேட்ட வடை வரும் என்பது தான். அதற்கு என்பன செய்யலாம்.. ஒன்று இல்லை மீன் கழுவி விட்டு வீட்டில் இருக்கும் வினிகர் கொண்டு ஒரு முறை கையை அலம்பினால் போதும்..வாடை போச்சு

கிறிஸ்ப்பி வடை

வீட்டில் வடை சுட வேண்டும் என்று ஆசைப்பட்டு, குடும்பத்தினர் இது என்ன வடையா இல்ல கல்லா என்று கேட்டு கிண்டல் செய்து விட்டனரா..கவலை வேண்டாம் எந்த வடைமாவு அரைக்கும் போதும் கொஞ்சம் பச்சரிசி மாவு சேத்துக்கோங்கங்க..அவ்ளோதான்.

இவை அனைத்தும் நாம் அன்றாடம் சமைக்கும் போது அனுபவிக்கும் துயரம்… இந்த டிப்ஸ் மூலம் சரிசெஞ்சுகொங்க.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -