Thursday, May 2, 2024

“இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது” – மோடி உரை!!

Must Read

மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா நகரங்களில் அதிநவீன பரிசோதனை மையங்களை திறந்து வைத்த பிரதமர் மோடி தனது உரையில் ” இந்தியாவில் மற்ற நாடுகளை விட இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது” என்று தெரிவித்து உள்ளார்.

அதிநவீன பரிசோதனை மையங்கள்:

ஒரு நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை மும்பை, கொல்கத்தா மற்ற நொய்டா போன்ற நகரங்களில் திறந்து வைத்தார். இந்த மையங்கள் மூலமாக 24 மணிநேரத்தில் ஒரு நபருக்கு தொற்று உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். ஓரிரு நாளில் 10,000 பெரு பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த மூன்று நகரங்களில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது, அதனால், இங்கு பரிசோதனை மையங்களை திறப்பது நல்ல பலனை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் உரை:

இதனை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அவர் ” கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட தற்போது நமது நாட்டில் குறைந்து உள்ளது. சர்வேதேச அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி..!

modi to open new corona testing centres
modi to open new corona testing centres

மீட்பு விகிதமும் மற்ற நாடுகளை விட கூட உள்ளது. ஒரு காலத்தில் இந்தியா ஒரு பிபிஇ கிட் கூட தயாரிக்கவில்லை, ஆனால், தற்போது பாருங்கள் நாம் உலகின் ரெண்டாவது உற்பத்தியாளர்களாக உள்ளோம். நான் எல்லா இந்தியரையும் காப்பாற்ற விரும்புகிறேன். தற்போது நமது நாட்டில் 11,000 க்கும் மேற்பட்ட கோவிட் பரிசோதனை மையங்களும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தனியான படுக்கையறை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.இந்தியாவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக முகமூடிகள் தயாரிக்கபடுகின்றனர். “இப்படியாக தனது உரையில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF கணக்கு வைத்திருப்பவர்களே., இவ்ளோ லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்? முழு விவரம் உள்ளே…

PF கணக்கில் பங்குகளை செலுத்தி வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -