வேளாண் மசோதாவிற்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு – எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 8 பேர் சஸ்பெண்ட்!!

0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று கொண்டு வரப்பட்ட வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவைத் தலைவர் மீது புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வேளாண் மசோதா:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றிற்கு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும் வெடித்துள்ளன. இவற்றில் 2 மசோதாக்கள் நேற்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர். மேலும் மசோதா புத்தகத்தை கிழித்து அவைத் தலைவர் மீது வீசினர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மசோதா நிறைவேற்றுவத்தில் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறி அவை துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக 12 எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் இதற்கு அவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கய்யா நாயுடு அனுமதி வழங்கவில்லை.

இந்தியாவின் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – தமிழகத்தில் முதல்வர் துவக்கி வைப்பு!!

மேலும் அவை துணைத்தலைவரை மிரட்டும் வகையில் செயல்பட்ட 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கே.கே.ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் உசைன், இளமாறன் கரீம் ஆகியோரை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து அவர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்பட்டதால் நாளை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here