இந்தியாவின் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் – தமிழகத்தில் முதல்வர் துவக்கி வைப்பு!!

0

தமிழகத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் வகையில் ‘அம்மா நகரும் ரேஷன் கடைகள்’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே இதனை செயல்படுத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

நகரும் ரேஷன் கடைகள்:

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் அரசு சார்பில் ரேஷன் கடைகளில் இலவசமாக எண்ணெய், பருப்பு, சர்க்கரை, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஊரடங்கில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்ட காரணத்தால், தூரமாக உள்ள ரேஷன் கடைகளுக்கு செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் மலைவாழ் மக்களும் சரியான சாலை போன்ற வசதிகள் இல்லாததால் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

tn ration shops
tn ration shops

இவற்றில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வகையில் ‘அம்மா நகரும் ரேஷன் திட்டத்தை’ முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்தார். அதனபடி, தமிழகம் முழுவதும் 3,501 நகரும் ரேஷன் கடைகள் ரூ.9.66 கோடி செலவில் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்நிகழ்வினை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

அதுமட்டுமின்றி ‘செறிவூட்டப்பட்ட அரிசி’ வழங்கும் திட்டமும் துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் பயன்பெறுவார்கள் என முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here