இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா – அரசு, தனியார் மருத்துவமனைகளில் 60,000 படுக்கைகள் தயார்..!

0

நாடு முழுவதும் கொரோனவவால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் 60 ஆயிரம் படுக்கை வசதிகளை அரசு ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் – உலகளவில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மிகவேகமாக பரவி வருவதால் மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. கொரனோ வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் அவர்களுடன் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மருத்துவ வசதிகள்:

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் செய்யவும் மற்றும் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவுக்கு வென்டிலேட்டர்கள் வைக்கவும், ஆக்ஸிஜன், முக கவசங்கள் தயாராக வைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் அதிக ஊழியர்களை பணியில் அமர்த்தி கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா Positive – சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

அதன்படி நாடு முழுவதும் கொரோனாவில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க 60 ஆயிரம் படுக்கைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் வென்டிலேட்டர் எண்ணிக்கையை 2½ மடங்கு அதிகமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here