மருத்துவப் படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு – அதிமுக சார்பில் மனு தாக்கல்..!

0
மருத்துவர்
மருத்துவர்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேர ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு அதிமுக சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இட ஒதுக்கீடு:

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் மருத்துவப் படிப்புகள் என்பது கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிறைவேறாத கனவாக மாறி வருகிறது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்குமாறு ஏற்கனவே முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம்..!

அதனை விசாரித்த நீதிபதிகள், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை கிடையாது இது தொடங்க உயர்நீதிமன்றத்தை அணுகுங்கள் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர். எனவே உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மதிமுக, திமுக ஆகிய கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது அதிமுக சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சரும் ஆன சிவி சண்முகம் சார்பில் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here