வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை – இன்றைய நிலவரம்..!

0
Gold
Gold

தமிழகத்தில் தொடர்ந்து 7 நாட்களுக்கு மேலாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து உள்ளதால் நகை வாங்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை உயர்வு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நகை மற்றும் ஆபரணங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வருட அட்சய திருதியைக்கு கூட கடைகள் திறக்கப்படாததால் நகை வியாபாரம் அடி மட்டத்திற்கு சென்றது. இதனால் முதலீட்டாளர்களும் தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் கவனத்தை செலுத்தியதால் அதன் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்தது. தற்போது கடைகள் திறக்கப்பட்டு நகை வியாபாரம் நடைபெற்று வருவதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் அதன் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Window display of jewelry shop

ரேஷன் கடைகளில் மீண்டும் ரூ.1000 நிவாரணம்..? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்..!

சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராம் 17 ரூபாய் உயர்ந்து ரூ. 4,552 க்கும், ஒரு சவரன் ரூ. 136 உயர்ந்து ரூ. 36,416 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சற்று குறைந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 53 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 53,000 ஆகவும் விலை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here