கொரோனாவுக்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்தியா..!

0
india america
india america

கொரோனாவின் ஆட்டம் இன்னும் குறையாமல்தான் இருக்கிறது.கொரோனா பரவ தொடங்கிய சீனாவில் கொரோனா இருக்கும் அறிகுறி இல்லாதளவுக்கு அந்த நாடே மாறியது ஆனால் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளில் தாக்கம் குறையாமல்தான் இருக்கிறது.இதற்கு எந்த நாடும் இதுவரை மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் இருக்கிறது.இந்நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து கொரோனவுக்கான மருந்து கண்டுபிடிக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது.

ரேஷன் கடைகளில் மீண்டும் ரூ.1000 நிவாரணம்..? அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம்..!

கொரோனவுக்கான தடுப்பு மருந்து

corona medicine
corona medicine

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது கொரோனா பரவலால் மக்கள் பெரும் அளவில் உயிர் சேதமும் நோயால் பாதிக்கப்பட்டும் உள்ளனர். கொரோனாவுக்கான மருந்து இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை ஆராய்ச்சி மற்றும் நடந்து கொண்டு இருக்கிறது உலக நாடுகள் போராடி வருகின்றன.உலக ஆராய்ச்சியாளர்கள் 6 மாதத்திற்கும் மேலாக தடுப்பு மருந்துக்கான பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பல தடுப்பு மருந்துகள் இதுவரையில் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் எந்த மருந்தும் இதுவரையில் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அனைத்தும் பரிசோதனை நிலையிலேயே உள்ளன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்தியா அமெரிக்கா கைகோர்த்துள்ளது

இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு ரெம்டெசிவிர் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேலும் பரிசோதனை முயற்சியாக சில மருந்துகளின் கூட்டு கலவையை நோயாளிகளுக்கு செலுத்தும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்க நிறுவனத்துடன் இந்திய நிறுவனம் கைகோர்த்துள்ளது. அமெரிக்காவின் ரெபானா (Refana) நிறுவனத்துடன் டில்லியை தலைமையிடமாக கொண்ட பனசியா பயோடெக் (Panacea Biotec) என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

பனசியா நிறுவனம் மருந்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கான அனுமதியையும் பெற்றுள்ளது. அதேபோல, அமெரிக்காவில் மருந்து விற்பனையை ரெபானா கவனித்துக்கொள்ளும். இது குறித்து பனசியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜேஷ் ஜெயின் கூறுகையில், ‛உலகம் தற்போது பாதுகாப்பான மருந்து ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. ரெபானா உடன் கூட்டணி அமைந்துள்ள நிலையில், 500 மில்லியன் மருந்துகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,‛ என்றார். இந்த பனசியா நிறுவனம், ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here