TNPSC குரூப் 4.., நல்லா படிச்சு இருக்கீங்களானு செக் பண்ண ஒரு வாய்ப்பு.., விவரம் உள்ளே!!

0

TNPSC தேர்வுக்கு தயாராகுபவர்கள் கவனத்திற்கு.., இன்னும் தேர்வுக்கு 50 நாட்களே உள்ள நிலையில் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்பொழுது உங்களுக்கான ஒரு டெஸ்ட் தான் இந்த பதிவு. அதாவது கீழே தமிழில் அடிக்கடி கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க முடிகிறதா?? என்று நீங்களே செக் செய்து கொள்ளுங்கள்.

1.”என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லாம் பற்றில்லேன்”- என்ற வரிகளைப் பாடியவர்

அ) திருப்பணாழ்வார்

ஆ) குலசேகராழ்வார்

இ) பேயாழ்வார்

ஈ) ஆண்டாள்

2.”செறு” என்பதன் பொருள்.

அ) செருக்கு

ஆ) சேறு

இ) சோறு

ஈ) வயல்

3.”திருக்குறளில் “ஏழு ” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

அ) 11

ஆ) 9

இ)8

ஈ) 10

4.கீழ்க்கண்ட நூல்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

அ) திரிகடுகம்

ஆ) திருவள்ளுவமாலை

இ) திருமந்திரம்

ஈ) திருக்குறள்

5.”தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?

அ) அப்பூதியடிகள்

ஆ) திருநாவுக்கரசர்

இ) சேக்கிழார்

ஈ) திருஞானசம்பந்தர்

6.யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதலில் பிச்சையேற்றாள்?

அ) கவுந்தியடிகள்

ஆ) மாதவி

இ) அறவணவடிகள்

ஈ) கண்ணகி

7.”தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்.

அ) கம்பர்

ஆ) இளங்கோவடிகள்

ஈ) காரியாசான்

இ) திருத்தக்க தேவர்

8.கம்பரைப் புரந்தவர் யார்?

அ) ஒட்டக்கூத்தர்

ஆ) சடையப்ப வள்ளல்

இ) சீதக்காதி

ஈ) சந்திரன் சுவர்க்கி

9.ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?

அ) பிரெஞ்சு

ஆ) கிரேக்கம்

இ) ஆங்கிலம்

ஈ) ஜெர்மன்

10.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?

அ) 2003

ஆ) 2002

இ) 2004

ஈ)2005

விடைகள்:

1.ஆ) குலசேகராழ்வார்
2.ஈ) வயல்
3.இ)8
4.இ) திருமந்திரம்
5.இ) சேக்கிழார்
6.இ) அறவணவடிகள்
7.ஆ) இளங்கோவடிகள்
8.ஆ) சடையப்ப வள்ளல்
9.இ) ஆங்கிலம்
10.இ) 2004

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here