‘இந்தியாவில் 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’ – சுகாதாரத்துறை தகவல்!!

0
Covid-19 vaccine with syringe and Indian flag image in the background-selective focus

இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி 35 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

35 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியில் சாதாரணமான பக்க விளைவுகள் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேர் பலியாகி உள்ளதாக மருத்துவ குழு அறிவித்திருந்தது. ஆனால் தடுப்பூசி போடும் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் காந்தி சிலை சேதம் – இந்தியர்கள் கண்டனம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடுவதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசம் 4,63,793 பேருடன் முதலிடத்திலும், இரண்டாவதாக 3,24,973 பேர் ராஜஸ்தானிலும், மூன்றாவதாக 3,07,891 பேர் கர்நாடகாவிலும், நான்காவதாக 2,61,320 பேருக்கு மகாராஷ்டிராவிலும் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1.7 லட்சமாக குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.6 சதவீதமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here