ரூ.49 ஆயிரத்தை தாண்டும் தூய தங்கத்தின் விலை – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

0

சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக தற்போது 24 கேரட் தூயதங்கத்தின் விலை ரூ.49,000 தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் குழம்பிப்போய் வருகிறார்கள்.

தங்கம்:

தற்போது வரும் 1ம் தேதி அன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு உள்நாட்டு முதலீட்டாளர்களின் தங்க முதலீடு காரணத்தினால் தங்கத்தை விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் மீதான வர்த்தகம் குறித்தும், தற்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்றும் முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மோசமான பங்கு சந்தை காரணமாக 24 கேரட் தூயத்தங்கம் தற்போது 407 ரூபாய் அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து 10 கிராம் தூயத்தங்கம் தற்போது ரூ.49,393 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் தற்போது ரூ. 49,106 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூ. 17 அதிகரித்து 1 கிராம் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 4,655 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 சவரன் ஆபரணத்தங்கம் தற்போது ரூ. 37,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘துணை முதல்வருடன் பயணம் செய்தது பெருமையாக உள்ளது’ – நடிகை குஷ்பு ட்வீட்!!

தங்கத்தை போலவே வெள்ளியும் தற்போது விலையில் அதிகரித்துள்ளது. MCX சந்தை நிலவரப்படி 1 கிலோ வெள்ளி தற்போது ரூ.69,765 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 1 கிராம் வெள்ளி ரூ.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.70,000 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here