ஆஸ்திரேலிய வீரர் வார்னரின் மகளுக்கு விராட் கொடுத்த பரிசு – வைரலாகும் புகைப்படம்!!

0

இந்தியா அணியின் கேப்டனான விராட் கோஹ்லி பெயர் மற்றும் நம்பர் இடம் பெற்றிருக்கும் ஜெர்சியை ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேனான வார்னரின் மகள் அணிந்துள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை வார்னர் சமூகவலைத்தளங்கலில் வெளியிட்டுள்ளார்.

வார்னர்:

சில தினங்களுக்கு முன்பாக தான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் முடிவுக்கு வந்தது. இதில் இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனையை படைத்தது. இதனால் இந்தியா அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு பல விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னர் தனது சமூக வலைத்தளங்களில் போஸ்ட் போடுவதை நிறுத்தவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தொடர்ந்து தனது போஸ்ட் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது புதிதாக ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவரது மகள் விராட் கோஹ்லி பெயர் மற்றும் நம்பர் பதிந்த ஜெர்சியை அணிந்திருப்பது போல் ஓர் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து வார்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கேப்சனில் கூறியதாவது, இந்தியாவிற்கு எதிரான தொடரில் நாங்கள் தோல்வியை தழுவியுள்ளோம்.

ரூ.49 ஆயிரத்தை தாண்டும் தூய தங்கத்தின் விலை – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

ஆனால் இது எனது மகளுக்கு விராட் கோஹ்லி அளித்த பரிசு. இதனை நான் மறக்கமாட்டேன். எனது மகள் ஐவி மே அந்த பரிசை மிக உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் வார்னரின் மகள் இந்தியா அணி கேப்டன் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here