ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

0
Corona
Corona

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் 13,856 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா:

நாடு முழுவதும் ஊரடங்கில் வழங்கப்பட்டு வரும் தளர்வுகளால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் இன்று வரை 3,80,532 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 12,573 பேர் உயிரிழந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona virus cases in india
corona virus cases in india

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

கடந்த 24 மணிநேரத்தில் 10,386 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,04,711 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்கள்:

  1. மஹாராஷ்டிரா – 1,20,504 பேர்
  2. தமிழ்நாடு – 52,334 பேர்
  3. டெல்லி – 49,979 பேர்
  4. குஜராத் – 25,601 பேர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here