உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

0
kp-anbalagan
kp-anbalagan

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் தான் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக 6 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அதில் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். அன்பழகன், ஜெயக்குமார் மற்றும் காமராஜ் ஆகிய அமைச்சர்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள வடசென்னை பகுதியில் முகாமிட்டு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.  டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும் 

Anbalagan
Anbalagan

டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு சீனாவிடம் உதவி – டிரம்ப்க்கு எதிராக புத்தகம் எழுதிய ஜான் போல்டன்..!

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களின் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அமைச்சர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here