டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு சீனாவிடம் உதவி – டிரம்ப்க்கு எதிராக புத்தகம் எழுதிய ஜான் போல்டன்..!

0
trumph china
trumph china

ஜான் போல்டன் அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.இவர் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்று புத்தகம் ஒன்று எழுதி உள்ளார்.இந்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடபோவதாக அறிவித்துள்ளார்.அந்த புத்தகத்தில் வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற சீனாவை நாடினாரா என்று எழுதியுள்ளதாக செய்தி ஒன்று கசிந்துள்ளது.

மணிப்பூரில் மாநிலங்களவை தேர்தல் – நெருக்கடியை சந்திக்கும் பா.ஜ.க..!

நவம்பர் மாதம் அமெரிக்கா அதிபர் தேர்தல்

john bolton trumph
john bolton trumph

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் அமெரிக்கா அதிபர் தேர்தலை வரும் நவம்பர் மாதம்  நடத்த உள்ளதாகவும் அமெரிக்க அரசியல்வாதிகள் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதிபர் ட்ரம்பே மீண்டும் போட்டியிடவுள்ளார்.பிரதான எதிர்கட்சியான ஜனநாயக்கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.அதில் டிரம்ப் மீண்டும்  வெற்றிபெற சீனா அதிபர் ஜி ஜிங்பிங் இன் உதவியை நாடியதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு அலோசகர் ஜான் போல்டன் எழுதியுள்ள புத்தகத்தில் வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அமைந்துள்ளன. ‘தி ரூம் வேர் இட் ஹேப்பன்ட்’என்ற பெயரில் சுமார் 577 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் வரும் 23 அன்று விற்பனைக்கு வர உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜான் போல்டன் டிரம்ப்க்கு எதிராக எழுதிய புத்தகம்

john bolton
john bolton

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தனது புதிய புத்தகத்தில் கூறியுள்ளார். மேலும் புத்தகத்தில் உய்குர் முஸ்லிம்களை பெருமளவில் தடுத்து வைப்பதற்காக சீனா வதை முகாம்களைக் கட்டுவதாக கடந்த ஆண்டு டிரம்பிடம் ஷி கூறியபோது, ​​டிரம்ப், முகாம்களைக் கட்டியெழுப்பி முன் செல்ல வேண்டும் என்று டிரம்ப் கூறினார், மேலும் இது சரியான செயலாகும் என்று அவர் நினைத்தார் என அதில் கூறி உள்ளார்.அவர் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்கான குற்றவியல் விசாரணையை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் போல்டன் குறிப்பிட்டு உள்ளார்.ஆனால் இதனை டொனால்டு டிரம்ப் மறுத்து உள்ளார்.”அவர் ஒரு பொய்யர்” “வெள்ளை மாளிகையில் எல்லோரும் ஜான் போல்டனை வெறுத்தனர் என கூறி உள்ளார்.போல்டன்  ஒப்பந்தங்களை மீறியதாகவும், இரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவரது புத்தகத்திற்கு தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது.

john bolton book
john bolton book

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் போல்டன் தனது புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.இதனிடையே ஜான் போல்டனின் புத்தகத்தை வெளியிட தடை விதிக்ககோரி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தை சந்தித்துவரும் அதிபர் ட்ரம்புக்கு இந்த புதிய சர்ச்சை தேர்தலில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here