ஜீ தமிழில் முடிவடைய இருக்கும் சாதனை படைத்த பிரபல சீரியல் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

ஜீ தமிழில் சீரியல்கள் அனைத்தும் விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் உள்ளனர்.

ஜீ தமிழ்

ஜீ தமிழில் சில காலத்திற்கு முன்பு சீரியல்கள் அனைத்துமே படு ஹிட். மேலும் விஜய் டிவியை காப்பி அடித்ததாகவும் ஜீ தமிழை விமர்சிக்க ஆரம்பித்தனர். ஆனாலும் விஜய் டிவிக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருந்தது. புதுப்புது சீரியல்களை களமிறக்கி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது.

அதில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பூவே பூச்சூடவா. இதில் புதுமுக நாயகியாக ரேஷ்மா நடித்திருந்தார். தனது முதல் வாய்ப்பையும் அழகாக பயன்படுத்தி கொண்டார் ரேஷ்மா. அந்த சீரியலில் அவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும் படியாக இருந்ததால் சீரியல் சூப்பர் ஹிட்.

ஜிகு ஜிகு உடையில் தொடை தெரிய லோ ஆங்கிளில் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா… வியந்து போன ரசிகர்கள்!!!

ஆரம்பத்தில் ரக்ஷிதாவின் கணவரான தினேஷ் தான் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலை விட்டு அவர் விலகியதால் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த சீரியல் 1500 எபிசோடுகளை கடந்து சாதனை செய்துள்ளது. இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் வெற்றியோடு நகர்ந்து கொண்டிருந்த பூவே பூச்சூடவா சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.

அதுவும் இதன் கிளைமாக்ஸ் எபிசோடு செப்டெம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது பற்றிய தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here