முக்கிய பிரபலத்துடன் கைகோர்த்த ராஜா ராணி சீரியல் நடிகர்… அப்போ என்னவா இருக்கும்!!!

0

விஜய் டிவியில் பல வித பரபரப்புடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் கதையின் நாயகன் சரவணன் அவர்களின் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாலாஜி தியாகராஜன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் அவர்களுடன் கைகோர்த்தபடி உள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை வரவழைத்து உள்ளது.

ராஜா ராணி என்ற சீரியல் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் மையக்கருத்தாக, படித்து வாழ்வில் ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் சந்தியா என்ற பெண், தன்னுடைய அம்மா, அப்பா இறப்பிற்கு பின் தன்னுடைய அண்ணனின் சுயநலத்தால் படிக்காத ஒரு இனிப்பு கடை முதலாளியான சரவணனை திருமணம் செய்கிறார்.

மேலும் சந்தியாவின் அண்ணன் மணி, சரவணன் படித்தவர் என்று சந்தியாவிடமும், சந்தியா 8வது வகுப்பு கூட தாண்டாதவர் என்று சரவணன் குடும்பத்தினரிடமும் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். மேலும் கல்யாணத்தின் போது இந்த உண்மையை தெரிந்து கொள்ளும் சந்தியா செய்வதறியாமல் திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்னர் பல முறை இந்த உண்மையை வீட்டில் சொல்ல முயற்சித்தும் முடியாமல் போகிறது.

இந்நிலையில் நாளடைவில் இந்த உண்மை சரவணன் குடும்பத்திற்கு தெரிய வர அதனால் பல்வேறு மன வேதனைகளை சந்திக்கிறார் சந்தியா. தற்போது தன்னுடைய நல்ல செயல்களால் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மெல்ல மெல்ல நன்மதிப்பை பெறுகிறார். மேலும் இவரின் மதிப்பை கெடுத்து வீட்டை விட்டு வெளியேற்ற சரவணனின் தம்பி செந்திலின் மனைவி அர்ச்சனா பல முயற்சிகளை செய்து வருகிறார். இவ்வாறு பல்வேறு கதை அமைப்புகளுடன் அந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் சரவணனின் தம்பி செந்தில் கதாபாத்திரத்தில், மிகுந்த சுயநலவாதியாக நடித்து வருபவர் பாலாஜி தியாகராஜன். இவர் தற்போது நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அவர்களுடன் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இவர் சமீபத்தில் தமிழக முதல்வருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here