சீனாவுடன் தொடர்புடைய 2,500 யூடியூப் சேனல்கள் நீக்கம் – கூகிள் அதிரடி!!

0
google youtube
google youtube

தவறான விடீயோக்களை பதிவிட்டு வருவதை தடுக்க யூடியூப் அதன் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவுடன் தொடர்புள்ள 2,500 க்கும் மேல் உள்ள யூடியூப் சேனல்களை  நீக்கியுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சீனா தொடர்புடைய 2500 சேனல்களை நீக்கிய கூகுள்

பிரபல வலைத்தளமான கூகுள்க்கு உரிய யூடியூப் சேனலில் தவறாக பகிர்ந்து வரும் விடீயோக்களை நீக்க முடிவு செய்தது. அதில் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதாக குற்றச்சாட்டுக்கள் வந்தன . அதைத்தொடர்ந்து அவற்றைக் அகற்ற வேண்டும் என்று தொடங்கியது கூகுள்.

google youtube
google youtube

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக சேனல்கள் அகற்றப்பட்டதாக ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது. யூடியூப் சேனல்கள் அகற்றிய அதிகமான சேனல்களில் தேவை இல்லாத மற்றும் அரசியல் சாராத உள்ளடக்கம் இருந்திருக்கின்றன. ஆனால் சில எண்ணிக்கையிலான சேனல்களில், அரசியல் தொடர்புள்ள உள்ளடக்கங்கள் இருந்துள்ளன என கூகுள் கூறியது. யூடியூப்ல் இருந்து நீக்கப்பட்ட 2,500 சேனல்கள் குறித்து கூகுள் எதுவும் கூறவில்லை.

google youtube
google youtube

ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் – RBI கவர்னர் அறிவிப்பு!!

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சமூக ஊடக பகுப்பாய்வு உள்ள கிராபிகாவால் நிறுவனம் அடையாளம் காணப்பட்டது. கூகுள் நீக்கியுள்ள சேனல்கள் தவறான பிரசாரத்துடன் தொடர்புடைய தான் என தகவல்கள் வந்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஈரான், ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here