ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் – RBI கவர்னர் அறிவிப்பு!!

0
indian economy
indian economy

கொரோன ஊரடஙகு மற்றும் கொரோன பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் 2020 – 2021 ஆண்டுக்கான பொருளாதார வீழ்ச்சியை பற்றியும் ரெப்போ வட்டி விகிதம் பற்றியும் ஏற்றுமதி பற்றியும் கூறினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

2020-2021 பொருளாதார வீழ்ச்சி

டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒரு சில சலுகைகளும், திட்டங்களையும் அளித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் நிதி கமிட்டி ஆலோசனைகளுக்கு பின் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றம் இல்லை அதன் விகிதம் 4 சதவிகிதமாக இனி வரும் எனவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.3 சதவிகிதத்திலும் எந்த மாற்றமும் இதுவரை செய்யவில்லை என கூறினார்.

reserve bank of india shaktikanta das

தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறைகள் எளிமையாக்கப்படும் – முதல்வர் பேச்சு!!

ரிசர்வ் வங்கியில் வணிக வங்கிகள் வாங்கும் கடன்களுக்கு செலுத்தம் வட்டி விகிதம் குறைத்தால் வாடிக்கையாளர்களுக்கான கடன் மேல் உள்ள வட்டியையும் வணிக வங்கிகள் குறைக்க வாய்ப்பு வந்துருக்கும். இருந்தாலும் வரும் காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஏப்ரல் – மே மாதங்கள் முதல் இந்தியாவில் பொருளாதாரம் சற்று உயர ஆரம்பித்துள்ளது. ஆனால் கொரோன பரவல் இன்னும் அடங்கவில்லை. ஊரடங்கு நீடிக்க பட்ட நிலையில் ஜூன் மாதம் ஏற்றுமதி குறைந்தது . பெட்ரோலின் தேவைகளும் குறைந்துள்ளது . மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதிலும் சற்று கடினமாக இருக்கிறது பண வீக்கம் அதிகரித்ததுள்ளது.

indian economy

வரும் 2-வது காலாண்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2-வது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். இப்போதுள்ள சூழலில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகடிவ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முழுவதும் அவ்வாறே இருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here