பிரபல நடிகர் சமீர் சர்மா வீட்டில் தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

டிவி சீரியல் ‘யே ரிஷ்டே ஹைன் பியார் கே’ என்ற பாத்திரத்தில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகர் சமீர் சர்மா, தனது 44 வயதில் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் தற்கொலை:

44 வயதான தொலைக்காட்சி நடிகரான சமீர் சர்மா புதன்கிழமை இரவு தனது மலாட் குடியிருப்பில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று மலாட் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மலாட் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நடிகர் நேஹா சிஎச்எஸ் கட்டிடத்தின் முதல் தளத்தில், மலாட்டில் (மேற்கு) அஹின்சா மார்க் தங்கியிருந்தார். புதன்கிழமை ஒரு பாதுகாப்பு காவலர் அவர் இறந்து கிடப்பதைக் கண்டு அருகில் இருப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மலாட் காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், “நாங்கள் தற்செயலான மரணம் தொடர்பான வழக்காக இதனை பதிவு செய்துள்ளோம், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம், விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.

Sameer Sharma
Sameer Sharma

நீ தாண்டி தேவு**** Meera Mithun-ஐ வெளுத்து வாங்கிய Vijay Suriya ரசிகர்கள்

இவர் ஹசி தோ ஃபாஸி மற்றும் இட்டெபாக் போன்ற படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீரின் மரணத்திற்கு நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் வருண் தவான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரிவுகளில் மன்மீத் க்ரூவால், பிரேக்ஷா மேத்தா, மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் உள்ளிட்ட பல தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here