இந்தியாவின் முதல் இளம் மேயர் – திருவனந்தபுரத்தில் பதவி ஏற்பு!!

0

இந்தியாவில் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 21 வயது பெண்மணியான ஆர்யா ராஜேந்தர் பதவியேற்றுள்ளார். இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஆர்யா ராஜேந்தர்:

இவர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு B.Sc கணிதம் படித்து வருகிறார். இவரது அப்பா ராஜேந்தர் எலெக்ட்ரிசியன் மற்றும் இவரது தாய் ஸ்ரீலதா பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். எஸ்எஃப்ஐ மாநில குழுவின் உறுப்பினர். சிபிஎம் கேசவதேவ் சாலைக் கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இவர் உள்ளார். இவர் முடவன்முகள் வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வந்தார். மேலும் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு எதிராணியான ஸ்ரீகலா என்னும் வேட்பாளரை 2872 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரஜினிகாந்தை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாம் – மகள் சௌந்தர்யா வேண்டுகோள்!!

தற்போது அவரது சிபிஎம் கட்சி அவருக்கு மேயர் பதவியை பரிந்துரை செய்துள்ளது. அதனை ஏற்ற அவர் இந்தியாவில் முதல் இளம் மேயர் பெண்மணி என்னும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இவருக்கு 21 வயது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகிறார். மேலும் மக்கள், தலைவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here