Friday, April 19, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா – பொதுக்கூட்டத்தில் முடிவு!!

Must Read

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக தற்போது சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சேத்தன் சர்மா அதிக டெஸ்டில் விளையாடி இருப்பதால் அவரை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு குழு தலைவர்:

பிசிசிஐ குழுவில் முன்னாள் வீரர்கள் இடம் பிடிப்பர். அணியில் வீரர்களை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்போது இதன் தலைவராக முன்னாள் வீரரான கங்குலி உள்ளார். இவரை தொடர்ந்து பலரும் செயல்பட்டு வருகின்றனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இப்படியான சூழலில் நேற்று கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் கங்குலி உட்பட நிர்வாகிகள், அதிகாரிகள் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் அணியின் வீரர்களை தேர்வு செய்வதற்காக கூடியுள்ளது. தற்போது மேற்கு மண்டலம் சார்பில் வேகப்பந்து வீச்சாளரான அபய் குருவில்லா மற்றும் தெற்கு மண்டலம் சார்பில் மொஹந்தி உட்பட 5 பேர் குழுவில் இடம் பெற்றனர்.

ஒரு ரூபாயில் சத்தான, தரமான உணவு – எம்பி கவுதம் காம்பிர் அசத்தல் திட்டம்!!

இந்த குழுவின் தலைவராக சுனில்ஜோஷி செயல்பட்டு வருகிறார். இப்படியான நிலையில் இந்த குழுவின் தலைவராக சேத்தன் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சுனிஜோஷியை விட அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்ற காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்திய அணிக்காக 65 ஒரு நாள் போட்டிகளிலும், 23 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -