Friday, April 19, 2024

ஒரு ரூபாயில் சத்தான, தரமான உணவு – எம்பி கவுதம் காம்பிர் அசத்தல் திட்டம்!!

Must Read

பாரதிய ஜனதா கட்சியின் எம்பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பிர் ஏழை எளியோருக்காக தற்போது ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளார். ஒரு நாளைக்கு 500 பேருக்கு உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்:

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்தவர், கவுதம் காம்பிர். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின், கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்றார். தற்போது அவர் எம்பியாகவும் உள்ளார். அவரது தொகுதியில் இன்று “ஏக் ஆஷா ஜன ரசோய்” என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையினை திறந்துள்ளார். ஏழை எளியவர்களுக்கு 1 ரூபாய் மூலமாக நல்ல சத்தான அதே சமயம் சுகாதாரமான உணவினை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த திட்டம்.

தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா – கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்!!

இந்த திட்டம் குறித்து கவுதம் காம்பிர் கூறியதாவது, “எளிய மக்கள் ஒரு நாளைக்கு இரு வேளைகள் கூட உணவு உட்கொள்ளாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. இந்த திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இனி ஒருவரும் வெறும் வயிற்றோடு இரவு தூங்க செல்ல கூடாது. இந்த அறக்கட்டளை மூலமாக சுகாதாரமான, சுத்தமாக உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். இந்த அறக்கட்டளை வாயிலாக அனைவரும் வந்து உணவு உட்கொள்ளலாம்”

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“சாதி, மதம் மற்றும் இனம் கடந்து இங்கு அனைவர்க்கும் உணவு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி ஒருவர் ஒரு ரூபாய் கொடுத்தால் போதுமானது. அவர் மீண்டும் உணவு வேண்டும் என்றலும் பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தான் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 500 பேருக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இன்னும் இந்த திட்டத்தினை விரிவுபடுத்த நினைக்கிறன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இவரையும் இவரது சமூக சேவையினை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -