
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளதால், இந்திய அணி வீரர்களை தீவிரமாக கண்காணிக்க போவதாக பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய வீரர்கள்
இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயின் தேர்வு குழுவானது அடுத்த மாதம் அறிவிக்கும் என தகவல் வெளியாகியது. இதற்கான இந்திய அணியில், பும்ராவை போல ஸ்ரேயாஸ் ஐயரும் முதுகு வலியால் அவதிப்பட்டு வருவதால், இவரது இடம் கேள்வி குறியாகி உள்ளது. தற்போது தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்ரேயாஸ் ஐயரை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.
IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!
இதே போல, கே எல் ராகுலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் பார்மை மீட்டால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம் பெற முடியும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 3 மாதங்களே உள்ளதால், இனி வரும் போட்டிகளில், இந்திய வீரர்கள் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.