
கொடைக்கானலில் முக்கிய இடமான டால்பின் நோஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானல்
மலைகளின் இளவரசி என்று சொல்லப்படும் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்காக மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல மக்கள் எப்போதும் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வழக்கம். ஆனால் இப்போது இந்த சுற்றுலா மையத்தில் சில நாட்களாக திடீரென வெயிலின் தாக்கத்தால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தீயால் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து சாம்பலாகியது. மேலும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு வெவ்வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்படி இருக்கையில் தற்போது இந்த காட்டு தீ டால்பின் நோஸ் பகுதியில் பரவியுள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். தற்போது இந்த காட்டுத்தீயால் சுற்றுலா பயணிகள் யாரும் டால்பின் நோஸ் பகுதிகளுக்கு செல்ல கூடாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆர்வத்துடன் சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.