IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

0
IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!
IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் உடல் நல குறைவால் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS:

சர்வதேச கிரிக்கெட் அணிகள் அனைத்தும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள, ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றன. இந்த வகையில், இந்திய அணியும் இந்த ஆண்டு தொடங்கத்திலேயே இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாடியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் ஒருநாள் தொடரில் விளையாட இந்திய அணி திட்டமிட்டிருந்தது. இதன்படி, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக, இந்த இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில், காயம் அடைந்த டேவிட் வார்னர், பூரண குணமாகி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கி உள்ளார்.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 46-வது பிறந்தநாள்…, கண் கலங்கிய நிலையில் கொண்டாடும் ரசிகர்கள்!!

இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி உடல் நல குறைவு காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது உடல் நிலையை பொருத்தே மற்ற இரு போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு விக்கெட் கீப்பரான ஜோஷ் இங்கிலிஸ் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here